நோக்கம்

போந்தேவேத்ரா பதிவேடுகளில் இந்த மாபெரும் வாக்குறுதியை நாம் காண்கிறோம். ஆனால் இந்தக் காட்சியை தேவ அன்னையின் மீது நாம் கொள்ள வேண்டிய தயவிரக்கத்திற்கான மாபெரும் வேண்டுகோள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா? இவ்விரண்டில் எது அதிக அத்தியாவசியமானது் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வோம் என்னும் வாக்குறுதியா, அல்லது துன்பப்படுகிற நம் அம்மாவின் இருதயத்திற்குப் பரிகாரம் செய்ய நமக்கு வாய்ப்புக் கிடைத்தது பற்றிய மகிழ்ச்சியா? மரண வேளையில் வரப்பிரசாதங்களைப் பெறுவதா, அல்லது ஏராளமான மனிதர்கள் நம் அம்மாவின் மாசற்ற இருதயத்தை நோகச் செய்கிறார்கள் என்ற உணர்வோடு வாழ்வதா? ஏனெனில் மாமரியை உண்மையாகவே அறிந்து, நேசிக்கிற ஒருவனுக்கு இதற்குரிய பதில் தெளிவாயிருக்கிறது. நம் சொந்த நன்மை இங்கு முக்கியமேயில்லை, ஆனால் மகா பரிசுத்த கன்னிமாமரிதான் இங்கே அனைத்திலும் அதிக முக்கியமானவர்கள். மாமரி என்னும்போது அவர்களுடைய வேதனை துக்கம், அவர்களுடைய இருதயத்தைத் துளைத்துள்ள முட்கள் ஆகிய எல்லாவற்றையும் பற்றித்தான் நாம் பேசுகிறோம். அவர்களை உண்மையாகவே நேசிக்கிறவர்களுக்கு, அவர்களுக்கு ஆறுதல் கொடுப்பது மட்டும்தான் முதல் சனி பக்தியைக் கடைப்பிடிப்பதன் நோக்கமாக இருக்கிறது.

நம்மைப் பாதுகாப்பதாக நம் இராக்கினி தந்துள்ள வாக்குறுதியில் ஒரு மிக அழகான செய்தி அடங்கியிருக்கிறது. திவ்விய தாயாரை மெய்யாகவே நேசிக்கிற எவனுக்கும் அது தெளிவாகப் புரியும். மாமரியை உண்மையாகவே வணங்குபவர்கள் ஏன் அடுத்து முதல் சனிக்கிழமை பூசைகளில் பங்கு பெறுவதில் மிகவும் கவனமாயிருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் செய்தி ஒரு காரணம். இந்த மனிதர்களுக்கு, கன்னி மாமரியோடு சேர்ந்து சேசுவின் ஜீவியத்தைத் தியானிக்கும் வாய்ப்பு மோட்சத்தின் முன்சுவையாக இருக்கிறது. நம் பரிசுத்த மாதாவின் மாசற்ற இருதயத்தோடு நம் இருதயத்தை ஒன்றித்து, அவர்களுடைய காட்சி தியானத்தில் பங்கு பெறுவதை விட மேலான ஆறுதல் எதுவும் இந்தப் பூலோகத்தில் இருக்க முடியுமா?

முதல் சனி பக்தியின் தன்மை

ஐந்து முதல் சனிக்கிழமை பக்தி என்பது மிகப் புனித கன்னிகையின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் கருத்தோடு தொடர்புடையது. அது கடைசி மணி வேளையில் நம் ஆன்மாவின் பாதுகாப்போடு இந்த அளவுக்கு அதிகத் தொடர்புள்ளது அல்ல. ஒன்பது தலைவெள்ளிக்கிழமைகளில் உள்ளது போலவே, ‘இப்போது எல்லாம் சரியாக இருக்கிறது. நான் ஐந்து தலைவெள்ளிக்கிழமைகளில் சேசுவின் திரு இருதய பக்தியைக் கடைப்பிடித்து விட்டேன். நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன்’ என்று யாரும் வெறுமனே நினைத்துக் கொள்ள முடியாது. இந்த வகையான ஒரு பக்தி முயற்சியை ஒருவன் தொடங்கி விட்ட கணம் முதல், அவனுடைய ஜீவியம் சரியான பாதையிலிருந்து அவனை வெளியே தள்ள முயலும் சோதனைகளுக்கும், பலவீனங்களுக்கும் எதிரான ஒரு தொடர்ச்சியான போராட்டமாக மாறிவிடுகிறது. ஆயினும் இந்த பக்தி முயற்சி நித்தியப் பேரின்பத்திற்கான தேடலில் ஒரு மாபெரும் உதவியாக இருக்கிறது. இதைச் சரியான முறையில் செய்து ஏராளமான ஞான நன்மைகளை ஒருவன் பெற்றுக்கொள்ள விரும்பினால், நம் இராக்கினியின் பாதுகாவலின் கீழ் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் ஒவ்வொரு நாளும் வாழ அவன் ஆசைப்பட வேண்டும். தங்கள் அன்புத் தந்தைக்கும், தாய்க்கும், பிரிவு, நிந்தை ஆகியவற்றால் உண்டாகும் வேதனையைத் தணிக்க விரும்பும் குழந்தைகளைப் போல நாம் இருப்போம் என்றால், அப்போது நம்முடைய மரண வேளையில் நம் இராக்கினியின் பாதுகாவலையும், உதவியையும் பிரசன்னத்தையும் நாம் பெற்றுக் கொள்வோம் என்ற உறுதியோடு நாம் நிம்மதியாயிருக்கலாம்.

நிபந்தனைகள்

1925 டிசம்பர் 10 அன்று, போந்தேவேத்ராவிலுள்ள அர்ச். டோரதியம்மாள் கன்னியர் மடத்தின் ஓர் அறையில் திவ்விய கன்னிகையும், அவர்களுடைய திருச்சுதனான குழந்தை சேசுவும் சகோதரி லூஸியாவுக்குக் காட்சியளித்தார்கள். நம் ஆண்டவராகிய சேசுவும், அவருடைய பரலோக மாதாவும், எப்படிப் பரிகாரம் செய்வது என்று அவளுக்கு விளக்கிக் கூறினார்கள்:

ஐந்து முதல் சனிக்கிழமை பக்தியின் அம்சங்கள்

பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப்படும் பாவசங்கீர்த்தனம்

முதல் சனி பக்தியைக் கடைப்பிடிக்க விரும்புகிறவர்கள் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்றோ, அதற்கு முன்போ, பின்போ நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இந்தப் பாவசங்கீர்த்தனத்தை செய்வது அதிக பலனுள்ளது. இந்தப் பாவசங்கீர்த்தனத்தை முதல் சனிக்கிழமைக்கு முந்தின வாரத்தில், அல்லது பிந்தின வாரத்தில் செய்தாலும் அது பரிகாரமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு காட்சியில் சகோதரி லூசியா நம் ஆண்டவரிடம், ‘தங்கள் பாவசங்கீர்த்தனத்தின்போது, பரிகாரக் கருத்தை மறந்து விட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டாள். ‘தங்களுக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில், அவர்கள் இந்தக் கருத்தோடு மீண்டும் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்’ என்று அவர் அவளுக்குப் பதிலளித்தார். சகோதரி லூசியாவால் தரப்பட்ட விளக்கத்தின்படி அடுத்த மூன்று நிபந்தனைகள் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று செய்யப்பட வேண்டும். ஆனாலும், ஒரு நியாயமான காரணத்தி;ற்காகஇ ஆன்ம குருவின் அனுமதியுடன்இ இந்த நிபந்தனைகளை மாதத்தின் முதல் சனிக்கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் அவர்கள் செய்து முடிக்கலாம்.

பரிகார நன்மை

இந்த திவ்விய நன்மையை, பரலோக மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக மனிதர்கள் கட்டிக் கொள்ளத் துணிகிற தேவதூஷணங்களுக்கும், அவமானங்களுக்கும் பரிகாரம் செய்யும் கருத்தோடு நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலை

ஜெபமாலை சொல்லத் தொடங்குமுன், இந்த ஜெபம் பாவிகளின் இரட்சணியத்திற்காக ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்றும், அது மாதாவின்மேல் நமக்குள்ள நேசத்திற்கு ஒரு நிரூபணமாகவும் இருக்கிறது என்றும் நம் பரலோக அன்னையிடம் சொல்வதன் மூலம், நமது பரிகாரக் கருத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

தியானம்

பதினைந்து நிமிடங்கள் ஜெபமாலையின் 15 தேவ இரகசியங்களைப் பற்றி தியானிப்பதன் மூலம் இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும் நம் பரலோக அன்னை இந்த தியானத்தை, ‘தியானித்தபடி தன்னோடு தங்கியிருத்தல்’ என்று அழைத்தார்கள். இதைப் பின்வரும் முறையில் செய்வது நல்லது்

முதலில் ஒரு குறிப்பிட்ட தேவ இரகசியத்தோடு தொடர்புள்ள பரிசுத்த வேதாகமப் பகுதி ஒன்றை வாசிக்கலாம். பரிகாரக் கருத்தை நாம் மனதில் உருவாக்கிக் கொள்வது அவசியம்.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், மறுநாளோ, அடுத்து வரும் ஞாயிறன்றோ நிறைவேற்ற வாய்ப்பில்லையா?

சகோதரி லூஸியா பதில் தருகிறாள்: ‘ஒரு நியாயமான காரணத்திற்காக, நம் ஆன்ம குருவின் அனுமதியின் பேரில், மாதத்தின் முதல் சனிக்கிழமைக்குப் பிறகு வரும் ஞாயிறன்று இந்த பக்தி முயற்சியை அனுசரிக்கலாம்’.

வாக்குறுதிகள்: ஒரு முறையாவது இந்த பக்தி முயற்சியைச் செய்து முடிப்பவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் எவை?

‘அவர்களுடைய மரண வேளையில் இரட்சணியத்திற்கு அவசியமான வரப்பிரசாதங்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று வாக்களிக்கிறேன்.’ மரண சமயத்தில் (விசுவாசக் கொடைக்கு வரப்பிரசாதத்திற்குப் பிறகு) அனைத்திலும் அதிக முக்கியமான வரப்பிரசாதமாகிய இறுதி நிலைமை வரமாகிய உதவி வரப்பிரசாதத்தோடு நம் பரிசுத்த அன்னை நம் அருகில் பிரசன்னமாயிருப்பார்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.