நம் இராக்கினியின் வேலையை
நம் இராக்கினியின் வேலையை இந்தச் சபையின் நோக்கமாக இருப்பதாலும்இ அது எல்லாக் காரியங்களிலும் அவர்களுடைய ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதாலும், அது அவர்களுடைய சபையாக இருக்கிறது. இதன் காரணமாக சபையின் ஒவ்வொரு உறுப்பினரும், எந்தக் கேள்வியும் கேட்காமல், எந்த விதிவிலக்குமின்றி, எல்லாச் சூழ்நிலைகளிலும் அமல உற்பவிக்குத் தன்னையே கீழ்ப்படுத்துவது அவசியமாகிறது. “ஒவ்வொரு உறுப்பினருடையவும் உத்தமமான நோக்கம், நம் இராக்கினியின் மீதுள்ள உண்மையான நேசத்தால், ஜீவியத்திலும், மரணத்திலும் நித்தியத்திலும் நம் இராக்கினியின் உரிமைச் சொத்தாக இருப்பது சாத்தியமாகும்படி, அவர்களுடைய ஓர் ஊழியனாகவும், ஒரு குழந்தையாகவும் அவர்களுக்காக வாழ்வது ஆகும்” என்று அர்ச். மாக்ஸிமிலியன் எழுதுகிறார்.
நம் பாத்திமா மாதா நம்முடைய நவீன காலங்களை “இறுதிப் போராட்டத்தின் நாட்கள்” என்று அழைக்கிறார்கள். தன் மாசற்ற இருதயத்தைப் “பாதுகாப்புள்ள அடைக்கல ஸ்தலமாக” நமக்கு முன்பாக வைக்கிற அவர்கள், அனைத்திலும் அதிக தீயதாகிய சோதனையை, அதாவது விசுவாசத்தை இழக்கும் சோதனையை வெல்லும் ஒரு வழியை உலகத்திற்குத் தருகிறார்கள். அவர்களுடைய மாசற்ற இருதயம் இல்லாவிடில், “பெரும் பாரமாக ஆத்துமங்களை அழுத்தி, அவற்றை மூழ்கடிக்கிற பசாசின் செயல்களை” முறியடிப்பதில் உலகம் உதவியற்றுப் போகும் நெருக்கடி நிலை வரும். பல்வேறு காட்சிகளின் வழியாகவும் (ல சலேத்), பக்திப் புத்தகங்களின் வழியாகவும், இந்த நெருக்கடி நிலைக்கு ஒரு தீர்வை அவர்கள் அடையாளம் காட்டுவார்கள்:
“(சேசுவினுடையவும், மரியாயினுடையவும்) போர்வீரர்களாக இருப்பவர்களின் போரணி ஒன்றை எனக்காகப் போர்புரியும்படி நான் அழைப்பேன். அது எல்லாத் தடைகளின் மீதும் வெற்றி கொள்ளும்.” இதுவே அர்ச். மாக்ஸிமிலியனின் செயற்திட்டம் - இந்தப் போரணியை உருவாக்குவது. அதன் பெயர் அமல உற்பவப் போரணி - (Militia Immaculatae - M.I.) ஆகும். (முன்பு இது அமல உற்பவியின் போர்வீரர்கள் சபை என்று பெயர் பெற்றிருந்தது.)
அர்ச். மாக்ஸிமிலியனின் காட்சியும், போதனையும்
அர்ச். மாக்ஸிமிலியனின் உயிருள்ள ஆத்துமங்களின் மீதுள்ள அக்கறையால் தூண்டப்பட்டு, வளர்ந்து வரும் திருச்சபையின் எதிரிகளின் வலிமைக்கு எதிராக இந்தப் போராட்டத்தைத் தொடங்கினார். ஒரே ஒரு சிருஷ்டி மட்டுமே சாத்தானை நசுக்க நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார். ஒரே ஒரு ஸ்திரீ மட்டுமே சகல தப்பறைகளையும் அழிக்கும் பலத்தைக் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். மகா பரிசுத்த கன்னிமாமரி மட்டுமே சந்தேகத்திற்கு இடமற்ற ஒரு வெற்றிக்கு நம்மை இட்டுச் செல்ல வல்லவர்களாக இருக்கிறார்கள். அமல உற்பவப் போரணியின் விதிமுறைப் பிரிவுகளில், “அவர்கள் அவனுடைய தலையை நசுக்குவார்கள்” என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்ப் பிரகடனம், நரக சக்திகளுக்கு எதிரான ஒரு மிக நிஜமான போர்ப் பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. ஆகவே அமல உற்பவி அதன் தளகர்த்தராக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஒரு பெரும் எண்ணிக்கையிலான தன்னுடைய ஊழியர்கள், போர்வீரர்கள், ஏன் தனது அடிமைகளின் மீதும் கூட அரசாளுவார்கள். இதனாலேயே அவர்கள் நம் எல்லாச் செயல்களின்மீதும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
பெருவீரர்கள் (Knights) என்று அழைக்கப்படுவோரின் கூட்டம் ஒன்றை ஒன்றுதிரட்ட அர்ச். மாக்ஸிமிலியன் எண்ணினார். இராணுவ வட்டாரங்களில் இந்த வார்த்தை மெய்க்காப்பாளருக்கு ஒப்பான ஒருவரை, தன் தளகர்த்;தருக்கு அருகில் நிற்கும் ஒருவரைக் குறிக்கும். மகா பரிசுத்த அமல உற்பவியின் பெருவீரன் என்ற இந்த சிந்தனை ஒரு பெரும் வெற்றியாக அமைந்தது. ஏனெனில் அது கோடிக்கணக்கான மக்களை அமல உற்பவியின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தது.
அமல உற்பவப் போரணி என்னும் கருத்தும்
அது இக்காலத்திற்கு எந்த அளவுக்கு பொருந்துகிறது என்பதும்
தப்பறைக் கொள்கைகளும், பொய் மதங்களும் மனங்களை இருளச் செய்து, நிதர்சனத்தின் அறிவுபூர்வமான புரிந்துகொள்ளுதலைக் கெடுத்து, ஆன்மாக்களிடமிருந்து தேவ இஷ்டப்பிரசாதத்தை அகற்றுவதால், அவை ஆத்துமங்களுக்கு மரண ஆபத்தை விளைவிக்கும் விஷமாக இருக்கின்றன என்பதில் அமல உற்பவியின் போர்வீரர்கள் சபையின் ஸ்தாபகருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. அமல உற்பவியின் திருக்கரங்களில் கருவிகளாக மாறும் போர்வீரர்கள், மாமரியைத் தங்களிலிருந்து பிற ஆன்மாக்களை நோக்கிக் “கசிய விடுவதாகக்” கூறப்பட்டது. இன்னும் மேலாக அறிவுக்குகந்த பல வழிகளில் அவர்கள் பாவிகளையும், பதிதர்களையும் பிரிவினைவாதிகளையும் மனந்திருப்பப் பாடுபடுவார்கள். ஓர் உறுதியான உணர்வைப் பற்றிக் கொள்வது, ஒரு கத்தோலிக்கனுக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே இன்றும் அதிக முக்கியமானதாக இருக்கிறது. இல்லாவிடில் அவன் தன் நிர்ப்பாக்கிய நிலையில் இழக்கப்பட்டு விடுவான். நம் எதிரி, கண்களுக்குத் தெரியாததும், அடையாளம் கண்டுகொள்ள சாத்தியமே இல்லாததுமான ஒரு முறையில் உலகின் மீது தான் செலுத்தும் ஆதிக்கத்தின் காரணமாக அளவுக்கு மீறி ஆபத்தானவனாக ஆகியிருக்கிறான். எதிர்மறையான விதத்தில் நம்மையும் குறிப்பாக நம் குழந்தைகளையும் தாக்குகிற பல அம்சங்கள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால்: தகவல் துறை ஊடகங்களின் வழியாக, தந்திரமான முறையில் நம் ஆன்மாக்களைக் கெடுக்க நடைபெறும் முடிவேயில்லாத முயற்சிகள், பல்வேறு வகையான பகைமையும், பிறரை அடக்கியாளும் குணமும் உள்ள நடத்தை மகிமைப் படுத்தப்படுதல், நம் உள்மனதைக் கடித்து விழுங்கும் விளம்பரத் துறையின் பெருக்கம், மார்க்சிஸ, இடதுசாரி கம்யூனிஸக் கொள்கை பல்கலைக்கழகங்களிலும், அறிவு சார்ந்த சூழல்களிலும் பெருமளவு பெருகுதல் - இது கடைசியானது என்றாலும், மற்றவைகளுக்கு எந்த விதத்திலும் குறைவுபடாதது - இவை நம் ஆன்மாக்களுக்குப் பேரழிவாக இருக்கிற ஒரு சில அம்சங்கள் ஆகும். ஆத்துமமும் கூட, அது பலவீனமானதாக இருக்குமானால், எந்த வகையான தீமையாலும் தாக்கப்படக் கூடியதாக ஆகிறது, அது தீமையின் “கருவியாக” ஆகிவிடுகிறது. மதுப் பழக்கத்தில் விழும்போதும், மக்களோடு போதை தொடர்பான உறவுகளில் சிக்கிக் கொள்ளும்போதும், பிரச்சினைகளோடு கூடிய சாதாரண வாழ்வில் ஒரு ஒரு சீர்கேடான நிலைக்கு உள்ளாகும்போதும், அது தன் அவஸ்தையை உணரும்.
அமல உற்பவி என்னும் அச்சு
நம்முடைய முழு ஞான வாழ்வும், நம் ஜெபங்களும், நம் சிந்தனைகளும், நம் கடமைகளும், நம் வாழ்வில் ஒவ்வொரு சிறு விவரமும், ஓர் அச்சில் வளர்க்கப்படும் போதுதான் அது மிகச் சிறந்த நிலையை அடைய முடியும். அந்த அச்சு மாமரியே. அதாவது, ஒருவன் தான் செய்யும் செயல்களை அவர்களிலும், அவர்கள் வழியாகவும், அவர்களுக்காகவும் செய்ய வேண்டும். அவர்களுடைய மாசற்ற இருதயம், ஒருவன் தன் இருதயத்தை வடிவமைத்துக் கொள்வதற்கான மாதிரிகையாக ஆக வேண்டும். அமல உற்பவி நம் அறிவின்மீது ஆட்சி செலுத்துகிறார்கள், நம் அரசியாக இருப்பதால், அவர்கள் ஓர் இறுதியான குறிக்கோளை நோக்கி, அதாவது நித்திய வெற்றியை நோக்கி நம்மை நடத்திச் செல்கிறார்கள். அவர்களே நம் வாழ்வில் தோன்றி, நம் ஜெபங்களுக்கும், நம் சுயாதீன சித்தத்திற்கும் ஏற்ப ஒரு மாற்றத்தை நம்மில் தொடங்குகிறார்கள். இது செய்யப்பட்ட பிறகுதான் ஒருவன் அமல உற்பவியின் போர்வீரனாக ஆக முடியும். கடவுளுக்குப் பிரியமான வகையில் நம் ஆத்துமங்களை உருவாக்கும்படி, அவர்கள் அவற்றைத் திடப்படுத்துகிறார்கள். பாதுகாப்பாகவும், சுறுசுறுப்பான விதத்திலும் அவர்கள் தன் குழந்தைகளில் ஒவ்வொருவரையும் அவதரித்த தேவ ஞானமான நமதாண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரின் சாயலுக்கு ஒப்பானவர்களாக உயர்த்துகிறார்கள். அமல உற்பவியின் போர்வீரர்கள் இயக்கம் சாதாரண வாழ்வில் மகா பரிசுத்த கன்னிமாமரியைப் பின்செல்லும் ஓர் உத்தம மாதிரிகையைத் தருகிறது.
அமல உற்பவியின் போரணியும், கத்தோலிக்கப் பாரம்பரியமும்
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன் போலந்திலும், உலகம் முழுவதிலும் அமல உற்பவப் போரணியில் நாற்பது இலட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். சங்கத்திற்குப் பிறகு, இந்த இயக்கத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், இந்தப் போரணியின் முக்கியக் குறிக்கோளையே முழுமையாக மாற்றி விட்டது – பாவிகளையும், பதிதர்களையும், குறிப்பாக சாத்தானின் இரகசிய சபையினரையும் மனந்திருப்புவதாகிய அந்த நோக்கம் ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டது. போராடும் திருச்சபையில் எப்போதும் இருந்து வந்த போராட்ட உணர்வும் மறைந்து விட்டது. அமல உற்பவப் போரணியில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. ஆகவே, 2000-ஆம் ஆண்டில் அர்ச். பத்தாம் பத்திநாதர் சபையின் அதிபர் அமல உற்பவப் போரணியை அர்ச். மாக்ஸிமிலியனின் காலத்தில் இருந்த அதன் முந்தின வடிவத்திற்குத் திரும்பக் கொண்டு வர அனுமதி தந்தார். அமல உற்பவப் பெரும் வீரர்கள் சபை, மாற்றப்பட முடியாத கத்தோலிக்க விசுவாசத்தைப் பாரம்பரிய முறைப்படி அனுசரிக்கும் அமல உற்பவப் போரணியின் நம்பகமான தந்தை வழிச் சொத்தைப் பாதுகாப்பதைத் தன் நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.