About Saint Maximilian
“என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டு எதையும் செய்ய என்னால் கூடும்” என்ற அர்ச். சின்னப்பரின் வார்த்தையே சுவாமி மாக்ஸிமிலியனுக்குப் பிடித்தமான சொற்றொடராக இருந்தது. மாமரியின் இந்தத் தீவிர பக்தர், அப்போஸ்தலரின் இந்த வாக்கியத்திற்குத் தமக்கேயுரிய முறையில் விளக்கம் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்் “அமல உற்பவியின் வழியாக என்னைப் பலப்படுத்துகிறவரில் எதையும் செய்ய என்னால் முடியும், என்னைப் பொறுத்த வரை, வாழ்வில் தேவைப்படுகிற சகல வரப்பிரசாதங்களினுடையவும் மத்தியஸ்தியாக இருக்கிற அமல உற்பவியில் என்னைப் பொறுத்த வரை, வாழ்வில் தேவைப்படுகிற சகல வரப்பிரசாதங்களினுடையவும் மத்தியஸ்தியாக இருக்கிற அமல உற்பவியில், எதையும் செய்ய என்னால் முடியும்!”