2015 பிப்ரவரி மடல்
அமலோற்பவத் தாயார் ஸ்துதிக்கப்படுவார்களாக!
அன்புள்ள அமல உற்பவப் போர்வீரர்களே,
அர்ச்சியசிஷ்டதனத்திற்கான ஒரு செயல்முறையைத் தேடும்போது, அது அர்ச்சியசிஷ்ட பட்டம் பெற்றவர்களால் அனுசரிக்கப்பட்ட மிகப் பெரிய செயல்களோடு அல்லது கடுமையான ஒறுத்தல் உபவாசத்தோடு தொடர்புள்ளது என்று நாம் அடிக்கடி நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம். நமக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடு சந்தேகமின்றி நாம் அசௌகரியமாக உணரச் செய்கிறது. அடிக்கடி ஒரு இரகசியமான அவதைரியம் நம்மில் வந்து, “இதை மறந்து விடு, இதற்காக நீ மிக அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று சொல்லி, நமக்குள் உள்ள பழைய ஆதாமுக்கும் ஆறுதல் சொல்கிறது. இன்னும் அதிகமாக, நாம் குடும்ப அல்லது வேலை சம்பந்தமான பெரிய பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும்போது, நம் இரட்சணியத்தின் எதிரி திருப்தியோடு தன் கரங்களைத் தேய்த்துக் கொள்கிறான். நோகடிக்கப்பட்ட ஆங்காரமும், காயப்படுத்தப்பட்ட சுயதன்மையும், “ஏழு ஆண்டு அபரிமிதமான விளைச்சலுக்குப்” (ஆதி.41) பிறகு விரைவாக விழித்துக் கொள்கின்றன. அவை தாபோர் மலையிலிருந்து இறங்கி வந்த குற்றத்தைச் செய்தவர்கள் பேரில் வன்ம வைராக்கிய முள்ளவையாக இருக்கின்றன. சில சமயங்களில் தவறாகக் கருக்கொள்ளப்பட்ட ஒரு நம்பிக்கை நம்மில் ஏற்பட்டு, கடவுளைப் பற்றிப் பாடுவது ஒன்றே நம் கடமை என்றும், நாம் நம்மை மாற்றிக் கொள்ளும்படி போராடத் தேவையில்லை, மற்றவர்கள்தான் அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்றும் நாம் நினைத்துக் கொள்ளச் செய்கிறது. நாம் என்ன விலை தர வேண்டும் என்பதைக் கேட்க நாம் விரும்புவதில்லை. ஆயினும் அதே விலையை மற்றவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம். நாம் போதுமான காலம் தங்கியிருந்த இந்த “சோப்புக் குமிழியைக்” கடவுள் உடைத்து விடும் அதிர்ஷ்டம் நமக்கு இருக்கிறது. இந்த உடைதல் நமக்கு வேதனையானதாகத்தான் இருக்கப் போகிறது. ஆயினும் இறுதியில் நாம் உறுதியான நிலத்தில் நின்று கொண்டிருப்போம். “இந்தப் பூமியின் மீது ஒரு முழுமையான உத்தமதனமும், உண்மையான மகிழ்ச்சியின் ஆதாரமும், நம் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும், நம்மைச் சாராதிருக்கிற காரியங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்வதிலுமே வருகின்றன” என்று அர்ச். மாக்ஸிமிலியன் நமக்கு நினைவுபடுத்துவார்.
நாம் அனைத்தையும் அமல உற்பவ அன்னைக்கு அர்ப்பணிப்போம் என்றால், இழப்பதற்கு நம்மிடம் ஒன்றுமிராது, ஆனால் ஆதாயமாக்கிக் கொள்வதற்கு எல்லாமே இருக்கிறது என்று கடவுளின் இந்த மனிதர் நமக்குக் கற்பிக்கிறார். அவருடைய வீரத்துவமுள்ள வேலை இதற்கு சாட்சியாக நிற்கிறது. ஆனாலும் அவருடைய இடைவிடாத கீழ்ப்படிதலையும் நாம் மறந்து விடக் கூடாது. உரோமைக்கு அவர் மேற்கொண்ட தயக்கமுள்ள பயணம் அமல உற்பவியின் மீது அவர் கொண்ட சிநேகத்தின் வளர்ச்சியிலும், அமல உற்பவப் போரணியின் ஸ்தாபத்திலும் போய் முடிந்தது. “அமல உற்பவியின் போர்வீரன்” பத்திரிகையை வெளியிடுவதற்கான அனுமதி, “உன் வங்கிக் கணக்கில் பணத்தைச் சேர்த்துக்கொள்” என்பது போலவே ஒலித்தது ஆனால் இந்த மாபெரும் அர்ச்சியசிஷ்டவர் தமது போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்தத் தந்திரமான ஆலோசனைக்கு அவர் உடன்படவில்லை. ஏனெனில் ஒரே ஒரு ஆன்மாவும் கூட எவ்வளவு மதிப்புள்ளது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் தாம் செய்த எல்லாவற்றையும், அமல உற்பவிக்காகச் செய்தார். சுகவீனம் காரணமாக, ஒரு வருடம் மருத்துவ சிகிச்சைக்குத் தாம் உட்பட நேர்ந்தபோது, அவர் கீழ்ப்படிதலோடு இந்த உத்தரவை நிறைவேற்றினார். அவர் கவலைப்பட்ட ஒரே ஒரு காரியம் அமல உற்பவியின் செயல்பாட்டில் தாம் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அவர்களே செயல்படும்படி அவர் விட்டுவிட்டார். நம்முடைய சொந்த அர்ச்சியசிஷ்டதனத்தின் இரகசியமும் இதுவே. அவர்களுடைய சுதந்திரப் பொருளாக இருப்பதிலும், அவர்களுக்காக அக்களிப்பதிலும், துன்புறுவதிலும் அது அடங்கியுள்ளது. என்ன நேர்ந்தாலும் சரி, “பாருங்கள் அம்மா, நான் எந்நேரமும் உடைத்துக் கொண்டே இருப்பதை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும்” என்று சொல்வது அவசியம். அமல உற்பவியின் முதல் போர்வீரர் சொல்லியுள்ளது போல, நம் சர்வேசுரன், நாம் செய்த காரியங்களுக்காக மட்டுமின்றி, நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், செய்து முடிக்க நாம் விரும்பிய காரியங்களுக்கும் சேர்த்து நமக்கு சன்மானம் தருவார். இன்னும் அதிகமாக “கடவுள் தம்மை நேசிப்பவர்கள் மரணத்திற்குப் பின்னும் இந்த உலகில் ஆன்மாக்களின் இரட்சணியத்திற்hக உழைக்கும் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர்களை அனுமதிக்க” மனதாயிருக்கிறார். இதனால்தான் நல்ல ஏவுதல்களும், புதுமைகளும் கூட நிகழ்கின்றன. இப்போது, நாம் ஆத்துமங்களின் ,ரட்சணியத்திற்காக ஏக்கத்தோடு பற்றியெரிகிறோம். நம் மரணத்திற்குப் பிறகு, அமல உற்பவ அன்னை நம் வழியாகத் தன் அலுவலைச் செய்து முடிப்பார்கள். அவர்களுடைய உத்தமதனத்தை நம் ஆத்துமத்தில் நம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மற்றவர்களுக்கு உதவுவதற்காக நம் கரத்தை நீட்டும் போது, நாம் விழுந்து விடாதபடி மிக கவனமாக இருக்க வேண்டும். ஆகவே, இங்கே, இந்த உலகில் நம் உழைப்பின் கனிகளை நாம் காணாதபோது, அதற்காக நாம் அதிகமாகக் கவலைப்பட அவசியமில்லை. அவற்றைப் பிற்பாடு நாம் சேகரித்துக் கொள்ள அனுமதிப்பதும், இப்போது அவற்றை நம் சக மனிதர்களுக்குக் காட்டுவதும் கடவுளின் சித்தமாக இருக்கலாம்.”
அர்ச்சியசிஷ்டதனம் சிக்கலானது அல்ல, ஆனால் அதை அடைந்து கொள்ள நாம் ஏக்கம் கொள்ள வேண்டும், ஜெபங்களைக் கொண்டும், நம்மைத் திருத்திக்கொள்ள கடுமையாக உழைப்பதன் மூலமும் நாம் அந்த உத்தமதனத்தை நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும். அமல உற்பவி தன் விருப்பப்படி நம்மைப் பயன்படுத்துமாறு அவர்களுக்குச் சொந்தமாக இருப்பது இன்றியமையாதது. ஏனெனில் எல்லா இடங்களிலும் நாம் ஒரு போர்க்களத்தையும், மோட்சத்திற்கென ஆன்மாக்களை ஆதாயமாக்கிக் கொள்ளும் வாய்ப்பையும் கண்டடைய முடியும். பரித்தியாகங்கள் வேதனை, சிரமங்கள் - இவை எல்லாவற்றையும் அமல உற்பவியின் கரங்களில் நாம் வைத்து விடுவோம். நம் வெற்றி தோல்விகளை அவர்களுக்கு ஒப்புக் கொடுப்போம். ஏனெனில் தனது பக்தியுள்ள குழந்தைகளை நேரடியாகக் கடவுளின் திரு இருதயத்தை நோக்கி இட்டுச் செல்கிற வழியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அர்ச். மாக்ஸிமிலியன் நம்பியது போல் நாமும் நம்ப வேண்டும். அதாவது, “நம் அன்னை தானே முன்வந்து நமக்கும், மற்ற மனிதர்களுக்கும் அதிமிக நன்மையாயிருப்பதை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்வார்கள்” என்று நாம் நம்ப வேண்டும். சிறியதும், பெரியதுமான காரியங்களில் வீரத்துவத்தின் ஆதாரமாக இருப்பது இதுவே. ,துவே மனந்திரும்புதலின் ஊற்றும் நமக்குரிய அர்ச்சியசிஷ்டதனமும் ஆகும். இதுவே அர்ச்சியசிஷ்டவர்களின் பாதை...
அமல உற்பவியில் சக போர்வீரன்.