2015 ஏப்ரல் மடல்

“என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டு எதையும் செய்ய என்னால் கூடும்”

அமலோற்பவ மாமரி ஸ்துதிக்கப்படுவார்களாக!

அன்புள்ள அமல உற்பவப் போர்வீரர்களே!

நாம் திருச்சபையின் குரலைக் கூர்ந்து கேட்கும்போது, அர்ச். சின்னப்பரிடமிருந்து ஓர் அழைத்தலை நாம் கேட்கிறோம். தம்மால் “சகல காரியங்களையும் செய்ய முடியும்” என்று அவர் விடாமல் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். நாமும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனாலும் அடிக்கடி முற்றிலும் வேறான ஓர் இடத்தில் நாம் இருப்பதைக் காண்கிறோம். ஏனெனில் நாடுகளின் அப்போஸ்தலர், “தம்மைப் பலப்படுத்துகிறவரில் இருந்தார்.” நாம் அடிக்கடி ஒரு சுயாதீன சித்தத்தைக் கொண்டிருப்பது பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறோம். அர்ச். மாக்ஸிமிலியனால் சுதந்திரமானதாக மட்டுமின்றி, பலவீனமானதுமாக இருப்பதாக விளக்கப்படுகிற ஒரு சுயாதீன சித்தம். இதனால்தான் நம்மிடம் தைரியம் இல்லாமல் போகிறது. இந்த தைரியமோ ஓர் உண்மையான நேசத்தின் எளிய விளைவேயன்றி அசாதாரணமான வேறு எதுவுமில்லை. வேத அபிமானமுள்ள இந்த அர்ச்சியசிஷ்டவர் ஒவ்வொரு கஷ்டத்திலும் ஓர் ஆதாயத்தைத் தேடியது ஏனெனில் அவருடைய இருதயம் சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துவை அறிந்திருந்தது. அது சுதந்திரமான முறையில் கிறீஸ்துவின் எதிரிகளின் கண்களை நேரடியாகச் சந்தித்தது. இவ்வளவு பலமுள்ளவராக ஆவது எப்படி சாத்தியம்? அர்ச். மாக்ஸிமிலியன் ஒரு தெளிவான பதிலைத் தருகிறார்: “நமது பலம் அதன் மூடத்தனத்தையும், பலவீனத்தையும், தரித்திரத்தையும் ஏற்றுக் கொள்வதிலிருந்தும் அமல உற்பவியின் நன்மைத்தனத்திலும் வல்லமையிலும் மட்டற்ற நம்பிக்கை வைப்பதிலிருந்தும் வருகிறது.

ஒரு மாட்டுத் தொழுவத்தின் மோசமான நிலையில் அதிக சமாதானமும், சௌகரியமும் உள்ள ஒரு வாழ்வை மனித சுபாவமானது ஏக்கத்தோடு பார்க்கக்கூடும். ஆனால் பரித்தியாகம் என்பது இதுதான், “ஒரு சரீர சுபாவம் ஆசிக்கிறதை விட அதிகமாக சாதிப்பது” பரித்தியாகம் என்ற வார்த்தையே இன்றைய நாட்களில் புரிந்து கொள்ள முடியாததாக ஆகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏதாவது ஒன்றைத் தருவதும், பதிலுக்கு எதையும் பெற்றுக் கொள்ளாதிருப்பதும் தேவைப்படுகிறது... அது நம் இருதயத்தை அகலமாக்கி, அர்ச்சியசிஷ்டவர்களில் நாம் உண்மையாகவே கண்டு பிரமிக்கிற இந்தப் பரிசுத்த சுதந்திரத்திற்குப் போதிய இடம் தருகிறது. வீரமிக்கவளாகப் பகைமை நிறைந்த கூட்டத்தைக் கடந்து சென்று, மரணத் தீர்வையடைந்தவரின் திருமுகத்தைத் துடைத்த அர்ச். வெரோணிக்கம்மாளின் திடதைரியத்தைக் கண்டு நாம் வியந்து பாராட்டுகிறோம். ஆனால் வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ இரக்கத்தை அனுசரிக்க நமக்கு நேரமில்லை. மரிய மதலேனம்மாளோடு சிலுவையின் அடியில் நிற்க நாம் ஏங்குகிறோம்... ஆனால் நீண்ட நேரத்திற்கு அல்ல, ஏனெனில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. கிறீஸ்துவின் பார்வை நம்மை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் சிலுவைப் பாதையைக் கண்டு அச்சப்படுகிறோம். இந்தப் பாதையோ, அழிவைத் தரும் உலக இன்பங்களின் நதிக்கு மேலே கட்டப்பட்டுள்ள ஒரு பாலமாக இருக்கிறது.

இங்கே நாம் ஒரு கேள்வி கேட்போம்: அர்ச்சியசிஷ்டவர்கள் ஏன் பயப்படவில்லை? அவர்களுடைய பலம் எங்கிருந்து வந்தது? கிறீஸ்துநாதர் மூன்றே வார்த்தைகளில் நமக்கு பதில் தருகிறார். “இதோ உன் தாய்!” அதனால்தான், “தங்கள் திவ்விய தாயாரை ஏற்றுக் கொள்கிறவர்கள்” அவர்களால் மாற்றமடைகிறார்கள். அவர்களை அடையாளம் ஏற்றுக் கொள்கிறவர்கள்” அவர்களால் மாற்றமடைகிறார்கள். உலகம் பெரும்பாலும் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாததாக இருக்கிறது. அது அவர்களைப் பித்தர்கள் என்று அழைக்கிறது. ஜெபங்களைக் கொண்டு தமது பெட்டகத்தைக் கட்டுபவரும், தேவத்திரவிய அனுமான திவ்விய நன்மைகளையும், ஆசை நன்மைகளையும், நல்ல பாவசங்கீர்த்தனங்களையும், அதனுள் ஞான ஜீவியத்தில் முன்னேறுவதற்கான சகல வலிமை மிக்க காரியங்களையும் ஏராளமாகத் தன்னில் சேகரித்துக் கொள்பவருமான பிரமாணிக்கம் நிறைந்த நோவாவை அது ஏளனம் செய்தது போலவே. அவர்களின் பலனாக அவர் இரக்கத்தைப் பயிற்சி செய்யத் தொடங்கி, தமது சிருஷ்டிகருக்கு அதிகம் ஒப்பானவராக ஆகிறார். நாம் அர்ச்சியசிஷ்டவர்களைக் கண்டு ஆச்சரியப்படக்கூடாது. மாறாக, “அமல உற்பவிக்காக வேலை செய்பவன் அதிகம் துன்புறுவது தவிர்க்க முடியாதது. அவர்களும் அப்படித்தான் துன்புற்றார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அன்பு சிலுவைகளையே உணவாகக் கொள்கிறது. நாம் அனைவரும் மிகவும் ஏழைகளாக, ஆனால் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறோம் – அல்லவா? நம் அம்மாவின் மிகப் பிரியமான திருக்கரங்களில் கருவிகளாக,” என்ற அர்ச். மாக்ஸிமிலியனின் வார்த்தைகளை நாம் தலையசைத்து அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். சிலர் இந்தக் கனிந்த தன்மையைத் தங்களை நோகச் செய்யும் காரியமாகக் கண்டார்கள். ஆனால் அது அன்பின் அடையாளம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உண்மையில், அது ஒரு சிலுவையால் பலப்படுத்தப்பட வில்லை என்றால், அது வெறும் பலவீனமுள்ள உணர்ச்சிவசப்படுதலாகி விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நேசம் ஒருபோதும் வற்றிப்போவதில்லை. அதனால்தான் நேசம் பாதாளத்தால் தடுத்து நிறுத்தப்பட சாத்தியமேயில்லாமல் இருக்கிறது. கிறீஸ்துநாதரின் உயிர்ப்பு நித்தியப் பசுமையுள்ள ஒரு மரமாக இருக்கிறது. அது விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலின் கனிகளைத் தருகிறது. உலகம் அமல உற்பவத் தாயாரின் திருப்பெயரை அறிந்து கொள்ளுமுன், அவர்கள் கிறீஸ்துநாதரின் உயிர்ப்பின் சாற்றைக் கொண்டு தன்னை முதலில் போஷித்துக் கொண்டார்கள். அவர்கள் ஏக சுதனானவரின் திருமாதாவாக இருந்தது போலவே, பிற்பாடு சிலுவை மரத்தின் மூலம் அவர்கள் மனுக்குலத்திற்கும் தாயாரானார்கள். ஆனால் எதுவும் பலவந்தத்தின்படி அல்ல, கிறீஸ்துநாதர் “நீ விரும்பினால்...” என்ற வார்த்தையை மிக அடிக்கடி சொல்லி வந்தார். அர்ச். மாக்ஸிமிலியன் இந்த இரு நேச இருதயங்களின் தாழ்ச்சியால் வசீகரிக்கப்பட்டார். இந்தப் புண்ணியம் எப்படித் தம்மிடம் குறைவுபடுகிறது என்று அவர் வருந்தினார். அவர் தம்மைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டார். அது சிந்தனைகளின் தெளிவை அவருக்குத் தந்தது. பிற்பாடு தமது சிரேஷ்டருக்குத் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் இப்படி எழுதினார்: “சில சமயங்களில் அமல உற்பவியின் வல்லமையைப் பற்றி நான் அதிசயிக்கிறேன். ஆங்காரமுள்ளவர்களை சர்வேசுரன் எதிர்த்து நிற்கிறார், தாழ்ச்சி உள்ளவர்களுக்கோ அவர் தம் வரப்பிரசாதத்தைத் தருகிறார். ஆனால் ஆங்காரிகளையும் கூட அமல உற்பவி தன் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுத் தீர்வையின் போது, நம் மிகப் பிரியத்துக்குரிய அம்மாவாகிய அமல உற்பவத் தாயார் உண்மையில் தன்னுடைய வல்லமை எப்பேர்ப்பட்டது என்று காண்பிக்க அவர்களை அனுமதிக்கும்படியாக, நாம் நம் நிர்ப்பாக்கிய நிலையை மிக கவனமாகவும், துல்லியமாகவும் எல்லோருக்கும் காண்பிக்கப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். இப்பேர்ப்பட்ட நன்மைத்தனத்தை சிருஷ்டித்த சர்வேசுரன் எப்பேர்ப் பட்டவராயிருக்கிறார்!”

அமல உற்பவியில் சக போர்வீரன்.


No photo  news003.jpg