2015 மே மடல்
அமல உற்பவியின் திருச்சித்தத்தை நிறைவேற்றுதல்
அமல உற்பவி ஸ்துதிக்கப்படுவார்களாக!
அன்புள்ள அமல உற்பவப் போர்வீரர்களே,
“ஏன் கவலைப்படுகிறாய், மூடனே?” மிகப் பெரும் பிரச்சினைகளின்போது தம்மிடமே இப்படிக் கேட்டுக் கொள்வது அர்ச். மாக்ஸிமிலியனின் வழக்கமாக இருந்தது. “அமல உற்பவ மாமரி உன்னை வழிநடத்த விடு” என்று அவர் தமக்குத்தாமே கட்டளையிடுவார். உடனே அவர் சமாதானத்தைப் பெற்றுக் கொள்வார். நம் நிதர்சன உலகில் பிரச்சினைகளே மிகுந்திருப்பதால், “செய்வதை விட சொல்வது மிக எளிது” நம்மில் பலர் பல தடவைகள் சொல்லியிருக்கிறோம் என்பது உண்மைதான். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலும்போது, “நாம் மிகவும் அற்பமானவர்கள்” என்பதை நாம் மறந்து விடுகிறோம். நமக்கு மிகச் சிறந்தது என்ன என்று அறிந்திருக்கிற ஒரு தாய் தேவைப்படுகிற பரிதாபத்திற்குரிய குழந்தைகளாகத்தான் நாம் இருக்கிறோம். “நாம் இங்கே வேலை செய்ய வேண்டும் என்று அமல உற்பவி எதிர்பார்க்கிறார்கள் என்றால், நாம் நம் முழு ஆற்றலையும், ஆர்வத்தையும் திறமைகளையும் பயன்படுத்தி வேலை செய்ய வேண்டும். நாம் ஓய்வெடுக்க வேண்டுமென அவர்கள் விரும்பினால், நாம் ஓய்வெடுப்போம்... அவர்களுடைய சித்தத்தை உத்தமமான விதத்தில் நிறைவேற்றுகிற இப்படிப்பட்ட ஓர் ஆன்மா அமல உற்பவிக்கென ஏராளமான நன்மையைச் செய்கிறது.” நம்மை இரட்சிக்கும்படி கடவுளால் நமக்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட கடமைகளை நாம் அனைவருமே கொண்டிருக்கிறோம். அவர் எந்தக் கஷ்டத்தையும் நமக்குத் தராமல் இருப்பதில்லை. ஏனெனில், “மனிதனின் ஜீவியமே ஒரு போராட்டமாக இருக்கிறது.” அர்ச்.சின்னப்பரோடு சேர்ந்து நாமும் வெற்றி வாகை சூடும்படி, இந்த ஓட்டப்பந்தயத்தை நாம் வெற்றிகரமாக முடிக்க வேண்டும். கடவுள் நம் அனைவருக்கும் பாதை காண்பித்திருக்கிறார். ஆகவே நாம் நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கும்படி ஜெபிப்பதே நம் அலுவலாக இருக்கிறது. அர்ச். சின்னப்பர் ஐந்து முறை கசையால் அடிக்கப்பட்டார். அர்ச். இராயப்பர் சிலுவையில் அறையப்பட்டார். அர்ச். முடியப்பர் கல்லாலெறிந்து கொல்லப்பட்டார். நாம் நம் சொந்தக் கஷ்டங்களைக் கொண்டிருக்கிறோம்...
மற்றவர்களிடம் நாம் காண்கிற திறமைகள் நம்மிடம் குறைவுபடுவது பற்றி நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம். இவ்வாறு சுயதன்மையால் நாம் எளிதாக மேற்கொள்ளப்படுகிறோம், “என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டு எதையும் செய்ய என்னால் கூடும்” என்ற திருச்சபையின் குரலை நாம் கேட்கவில்லையா? நம் சொந்த பலவீனத்தைப் பகுத்துணர்வதுதான் அர்ச்சியசிஷ்டதனம் அடைவதற்கான முதல் படியாக இருக்கிறது. அது நமக்குப் பரிசுத்தமான அவமான உணர்வைத் தருகிற படியாக இருக்கிறது. ஏனெனில் நம்மிடம் ஒன்றுமில்லாததால், நாம் எல்லாவற்றையும் கேட்க வேண்டியுள்ளது. இந்த “எல்லாமும்” அமல உற்பவியின் இருதயத்தில் நிகழ்கிறது் ஜெபம்இ கீழ்ப்படிதல், சிலுவை வரைக்கும் நேசம், கடவுளின் சித்தம்... எல்லாமும், “கிறீஸ்துவை அவருடைய திருமாதா அறிவது போல் வேறு யாரும் அறிவதில்லை. எனவே கிறீஸ்துவை அறிவதற்கான வழியில் அவர்களைத் தவிர சிறந்த வழிகாட்டியோ, தலைவரோ வேறு யாரும் இருக்க முடியாது. மேலும் கிறீஸ்துவுக்கும், மனுக்குலத்திற்கும் இடையே ஒரு அதிக பலமான பந்தத்தை உருவாக்க அவர்களைத் தவிர வேறு யாராலும் முடியாது.”
சேசுநாதர் பூமியிலிருந்த போது, அவர் அமல உற்பவியின் மாசற்ற இருதயமாகிய மோட்சத்தைப் பற்றி எப்போதும் பேசினார். அதை மண்ணில் மறைந்திருக்கும் பெரும் புதையலுக்கு அவர் ஒப்பிட்டார். அதை அடைவதற்காக நாம் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியுள்ளவர்களாக இருக்கிறோம். அல்லது அவர் ஒரு திராக்மா நாணயத்திற்கு அதை ஒப்பிடுகிறார். அதைக் கண்டுபிடித்ததற்காக ஒரு பெண் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்படி மற்றவர்களை அழைக்கிறாள். இந்த மகிழ்ச்சி வேதபோதகத் தன்மையுடையது. ஏனெனில் அது நம் இருதயங்களை மூடி வைக்காமல், உலகத்திற்காக அதைத் திறக்கிறது. இந்த மகிழ்ச்சிதான் அர்ச். மாக்ஸிமிலியனை மிகத் தொலைவான ஜப்பானுக்கு இட்டுச் சென்றது. மேலும் அது ஆஸ்க்விட்ஸ் சித்திரவதைக் கூட்டத்திலிருந்த பட்டினிக் கிடங்கில் தம்மோடு இறந்து கொண்டிருந்த தமது சக கைதிகளுக்கு ஆறுதல் தரவும் அவருக்கு உத்தரவிட்டது. “இருப்பவன் இல்லாதவனுக்குத் தன்னிடம் உள்ளதைக் கொடுக்க வேண்டும்” என்ற ஒரே காரணத்திற்காக. அமல உற்பவப் போரணி ஏன் ஒரு வேதபோதக அமைப்பாகவும் இருக்கிறது என்பதற்கான காரணம் இதுதான்.
இங்கே ஏதோ ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஓர் அந்நிய நாடல்ல, மாறாக குடும்பத்திலும், பள்ளியிலும், வேலைத் தளத்திலும், ஏன் தெருவிலும் கூட நம்மைச் சுற்றியிருக்கிற அக்கம்பக்கத்தினர்தான் நம்முடைய வேதபோதகக் களமாக இருக்கிறார்கள். நாம் அழியாத ஆன்மாக்களால் சூழப்பட்டிருக்கிறோம். அவை கடவுளால் சுத்திகரிக்கப்பட்டன, சுத்திகரிக்கப்படுகின்றன. அல்லது அவை அவரை அனுமதித்தால் அவரால் அவை சுத்திகரிக்கப்படும் வார்த்தைகள் தங்கள் ஒலியைக் கொண்டு வசீகரிக்க முடியும் என்றாலும், ஜீவிய முன்மாதிரிகையே அவர்களுடைய முத்திரையாக இருக்கிறது. இதுவே அமல உற்பவப் போர்வீரனின் கடமையாக இருக்கிறது. முன்மாதிரிகை தருவது எப்படி? நமக்கு மிகப் பிரியமான அன்னையை நேசிப்பதன் மூலம் அர்ச். மாக்ஸிமிலியன் கூறியுள்ளது போல, “அமல உற்பவிக்குச் செலுத்தப்படும் அனைத்திலும் சிறந்த வணக்கம் பல ஜெபங்களைச் சொல்வது அல்ல, மாறாக ஒரு சிறு குழந்தை தன் தாயிடம் கொண்டிருக்கும் எளிமையான மனநிலையே சிறந்த வணக்கமாக இருக்கிறது. வேலை நேரத்தில் நம் அமல உற்பவ மாதாவை நினைத்து அன்போடும், ஏக்கத்தோடும் நாம் வெளியிடும் ஒரு பெருமூச்சு மிகச் சிறந்த ஜெபமாக இருக்கிறது. இது மிக எளிதில் கடைப்பிடிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஏனெனில் அது அமல உற்பவ அன்னையோடு நம்மை அதிகமதிகமாகப் பிணைக்கிறது. அது நம்மை அவர்களுடைய கரத்திலுள்ள ஒரு கருவியாக்குகிறது. அதன் பலனாக (அவர்களுடைய சித்தத்தை அறிவதற்கான) ஞான வெளிச்சம் பெற்ற ஒரு மனதின் வரப்பிரசாதத்தையும், (அவர்களுடைய திருச்சித்தத்தை நிறைவேற்றுவதற்காக) நம் சித்தத்தைப் பலப்படுத்தும் வரப்பிரசாதத்தையும் நாம் பெற்றுக் கொள்கிறோம்”
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக, பாத்திமாவில் சொல்லப்பட்ட, “ஜெபியுங்கள், உங்களையே பரித்தியாகமாக ஒப்புக்கொடுங்கள்” என்ற வார்த்தைகள் எதிரொலித்து வருகின்றன. “மற்றவர்களிடமிருந்து வரும் அநேக துன்பங்களைத் தாங்கிக் கொள்வது, நம் செயல்களை எளிதாக ஆன்மாக்களுக்கு நம்மை பயக்கும் விதத்தில் செய்வதற்கு நமக்கு மிக உதவியாக இருக்கிறது” என்று நம்முடைய அர்ச்சியசிஷ்டவர் வலியுறுத்துகிறார். மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கையோடு நாம் பரலோக மந்திரத்தில் “எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்” என்று நாம் சொல்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக இது சேசுக்கிறீஸ்துநாதரால் நமக்குக் கற்பிக்கப்பட்ட ஜெபமாக இருக்கிறது. ஆகவே கடவுளுக்கு எதிராக நாம் கட்டிக் கொண்டுள்ள சகல பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படும் உரிமையைப் பெறுவதற்குஇ நமக்குத் தீமை செய்தவர்களை முழுமையாக மன்னிப்பது போதுமானது. உண்மையாகவே நாம் மன்னிக்க எதுவும் இல்லை என்றால் அது ஒரு பிரச்சினையாக இருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் பெரியதும், சிறியதுமான பல காரியங்களை மன்னிக்க வேண்டியிருக்கும் போது, இது ஒரு நிஜமான மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் சுபாவம் துன்பத்தையும் அவமானத்தையும் வெறுக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதிக வல்லமையுள்ள ஜெபங்கள் வழியாகக் கடவுளை நெருங்கிச் செல்லும்படி நம் ஆத்துமங்களை சுத்திகரிப்பது விசுவாச ஒளியில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
அமல உற்பவியில் சக போர்வீரன்.