2015 ஜுன் மடல்
அமல உற்பவ அன்னைக்கு ஊழியம் செய்யும் விதம்
அமல உற்பவ மாமரி ஸ்துதிக்கப்படுவார்களாக!
அன்புள்ள அமல உற்பவப் போர்வீரர்களே,
அமல உற்பவ அன்னையின் ஒரு கருவியாக, ஊழியனாக, குழந்தையாக, உடைமையாக ஆவதற்கான ஒரு வழியையும், அதே வேளையில் அந்த அன்னையையுமே தாம் தேடிக் கொண்டிருந்த போது, “ஏட்டளவிலும், அதைவிட அதிகமாக, நடைமுறையிலும் அமல உற்பவிக்கு ஊழியம் செய்வது எப்படியென்று எனக்குத் தெரியவில்லை” என்று அர்ச். மாக்ஸிமிலியன் ஒரு முறை கூறினார். நாம் மட்டும் தனியாக செயல்படும்போது, கடவுளுடைய திட்டங்களைச் சீர்குலைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய நம்மால் முடியாது என்ற முடிவை அவர் விரைவாக வந்தடைந்தார். இதனாலேயே, “அமலோற்பவிதான் நமக்குக் கற்பிக்க வேண்டும், நம்மை வழிநடத்த வேண்டும். மாமரியில் சேசுவும், திருச்சுதனில் பிதாவும் வசிப்பது போல, நம்மில் மாமரி வசிக்கும்படி நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் அவர்கள் தன்னைப் போலவே மாற்ற வேண்டும்.” ஆயினும், ஐக்கியத்தைப் பற்றிப் பேசும் அளவுக்கு மிக நன்றாக ஒருவரை அறிந்து கொள்வதற்கு, அவரோடு சேர்ந்து நிறைய நேரத்தை செலவிட வேண்டும், அந்த மனிதர் என்ன செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்பதைக் காணவும், அது பற்றிச் சிந்திக்கவும் வேண்டும். அவருடைய முன்மாதிரிகையைப் பின்பற்றுவதும், அவரை நேசிப்பதும், தன் சொந்த ஆசைகளை அடக்குவதும் அவசியம். இதெல்லாமே, “நம்மைச் சார்ந்ததாக இருப்பதை நன்றாகச் செய்வதும், நம்மைச் சார்ந்ததாயிராததை தைரியத்தோடு தாங்கிக் கொள்வதும்” ஆகிய ஒரே கொள்கையோடு வாழ்வதைக் குறிக்கிறது. இதுவே அர்ச். மாக்ஸிமிலியனுக்கு பலம் தந்து கொண்டிருந்த மகிழ்ச்சியின் இரகசியம் ஆகும். தாம் “இல்லாதவராய் இருக்கிறவர்” என்பதை அவர் மிக நன்றாக அறிந்திருந்ததால், அவருடைய வாழ்வே ஜெபமாகிப் போனது. எனவே அவர் “இருக்கிறவராக” இருப்பவரிடமிருந்து எல்லாவற்றையும் நம்பிக்கையோடு கேட்டார். இதனாலேயே போரணி வீரர்கள் அன்பு மற்றும் மகிழ்ச்சியின் இரகசியம் ஆகும். தாம் “இல்லாதவராய் இருக்கிறவர்” என்பதை அவர் மிக நன்றாக அறிந்திருந்ததால், அவருடைய வாழ்வே ஜெபமாகிப் போனது. எனவே அவர் “இருக்கிறவராக” இருப்பவரிடமிருந்து எல்லாவற்றையும் நம்பிக்கையோடு கேட்டார். இதனாலேயே போரணி வீரர்கள் அன்பு மற்றும் மகிழ்ச்சியின் சில சிறு துணிக்கைகளைப் பற்றி சிந்திக்காமல், எல்லாவற்றின் மீதும் ஆசை கொள்ளும்படியாகவும், “மாமரி நம்மை நேசிக்கும் அளவுக்கு அவர்களை நேசிக்க நம்மால் ஒருபோதும் இயலாது” என்றாலும், அமல உற்பவ மாமரியின் வழியாக கடவுளின் அதிமிக மகிமையை ஏக்கத்தோடு நாடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் விஞ்சும்படியாகவும் உத்தரவிட்டார். அர்ச். மாக்ஸிமிலியன் இதை உணர்ந்திருந்தார். அது மிகக் கொடிய வாதையின் காலங்களிலும் அவருக்கு நம்பிக்கையைத் தந்தது. அந்த வாதையின் காலம் முழுவதையும் அமல உற்பவ மாதாவின் திருப்பாதங்களில் நம்பிக்கையோடு காத்திருப்பதில் அவர் செலவிட்டார். இதே போல நாமும் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் புயல் நின்று தெளிந்த ஆகாயம் தோன்றும்வரை காத்திருக்க வேண்டும். “கவலைப்படவோ, கடும் அச்சவசப்படவோ வேண்டாம். ஏனெனில் எல்லாத் துன்பங்களும் வேதனைகளும் தணிந்து போகின்றன. ஆனால் கடவுளோ மாறாதவராக இருக்கிறார். எல்லாவற்றையும் சென்றடைய பொறுமை உங்களுக்கு உதவி செய்யும். கடவுளைத் தனது ஆதாயமாக்கிக் கொள்பவனுக்கு எதிலும் குறைவிராது. அவர் ஒருவரே போதுமானவராயிருக்கிறார்” என்று அர்ச். குழந்தை சேசுவின் தெரேசம்மாள் நமக்குக் கற்பிக்கிறாள். ஆனால் நாம் மவுனத்தின் மத்தியிலும், நம் இருதயத்தின் ஒருமுகத்தன்மையிலும் அவரைத் தேட வேண்டும். நம் இருதயம் தேவமாதா மீதுள்ள பக்தியின் வழியாக வெளியரங்கப் பரபரப்பு அனைத்தையும் அடக்கிவிட வல்லதாயிருக்கும். மொத்தத்தில், அமல உற்பவி எப்போதும் எல்லாவற்றையும் தன்னந்தனியாகவே வழிநடத்துகிறார்கள் என்பதால், அவர்கள் நம்மிடம் கேட்பதை நாம் அலட்சியம் செய்யாதிருப்பது போதுமானது என்று அர்ச். மாக்ஸிமிலியன் அடிக்கடி கூறி வந்தார். நாம் அடிக்கடி நம் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்கிறோம். உதாரணமாக, இப்போதிலிருந்து ஒரு வருடம் கழித்து என்ன நடக்கும் என்று கேட்கிறோம். எல்லாமும் அமல உற்பவ அன்னையின் திருக்கரங்ளில்தான் இருக்கிறது. ஆகவே அவர்களே நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் நாம் செல்ல வேண்டிய வழியை முழுமையாக அறிந்திருக்கிறார்கள். இதைப் பற்றி அர்ச். மாக்ஸிமிலியன் நம் எல்லோரிடமும், “நீங்கள் தேவமாதாவின் முழுமையான, எந்தக் கட்டுப்பாடுமற்ற, மாற்ற முடியாத உடைமையாக இருக்கிறீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும், உங்களிடம் என்னென்ன இருந்தாலும், உங்களால் என்னென்ன செய்ய முடியும் என்றாலும், உங்களுடைய வெறுமையான அல்லது மகிழ்ச்சியற்ற சிந்தனைகளும், சொற்களும், செயல்களும் அவர்களுடைய முழுமையான உடைமையாக இருக்கின்றன. ஆகவே அவற்றைக் கொண்டு அவர்கள் தான் விரும்புவதைச் செய்ய அவர்களை அனுமதியுங்கள். மேலும் உங்களுடைய விருப்பங்கள் எல்லாமும் அவர்களுடையதே. அவர்கள் மாற்றட்டும், சேர்க்கட்டும், அல்லது எடுத்து விடட்டும். ஏனெனில் நீதியைச் சீர்குலைக்க அவர்களால் இயலாது” என்று கூறினார்.
இவ்வாறு, “அமல உற்பவ மாதாவைத் தன் தாயாகக் கொண்டிருக்க விரும்பாத எவனும் கிறீஸ்துநாதரைத் தன் சகோதரராகக் கொண்டிருக்க மாட்டான். பரலோகப் பிதாவும் தம் திரு;சுதனை அவனிடம் அனுப்ப மாட்டார். திருச்சுதனும் அவனுடைய ஆன்மாவில் இறங்கி வர மாட்டார். இஸ்பிரீத்துசாந்துவானவர் தமது வரப்பிரசாதங்களின் அச்சில் அவனை வார்த்தெடுத்து உருவாக்க மாட்டார்... ஏனெனில் இதெல்லாமே பிரியதத்தத்தினால் பூரணமான அமல உற்பவ மாமரியில்தான் நிகழ்கின்றன” என்ற அறிவுக்கு உகந்த முடிவுக்கு நாம் வருகிறோம். இதனால் தான் நாம் அர்ச்சியஷ்டவர் அடிக்கடி, “உங்களுக்கு என்ன வேண்டும், அமல உற்பவியே?” என்று கேட்டார். பல்வேறு சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்கிறோம். அச்சமயங்களில் ஒரு நல்ல அறிவுரை நமக்குத் தேவைப்படுகிறது. அறிவுரை தருபவர்கள் எப்போதும் அநேகர் இருக்கிறார்கள். ஆனால் நல்ல ஆலோசனை மாதா ஒருவர்தான் இருக்கிறார்கள். அதனாலேயே, அர்ச்சியசிஷ்டவர்கள் நமக்கு நினைவுறுத்துவது போல, மாமரி கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்தது போல, நம் செயல்களின் பலன்கள் அவர்களுக்கு நாம் கீழ்ப்படிந்திருப்பதைச் சார்ந்திருக்கின்றன் அவர்கள் திருவாய்மலர்ந்து சொல்வதற்கு முன்பே அவர்களுடைய மாசற்ற இருதயத்திலுள்ள எல்லாவற்றையும் மனமுவந்து ஏற்றுக் கொள்வதை அவை சார்ந்துள்ளன. ஒரு துன்ப சோதனை வருவதற்கு முன்பே அவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள். நாமோ நம் பாவங்களால் அவர்களுக்குப் பிரமாணிக்கமாயிராமல் துரோகம் செய்தோம். ஆனால் அவர்கள் அந்தப் பிரமாணிக்கத்தை நமக்கு மீண்டும் பெற்றுத் தந்தார்கள். அவர்களே நம் பலவீனத்தில் நம் வல்லமையாக ஆனார்கள். இதனால்தான் அவர்களோடு செல்வது கடவுளிடம் திரும்பிச் செல்வதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இல்லாமல் செல்வது, அவரை என்றென்றும் இழந்து போவதாக இருக்கிறது...
அமல உற்பவியில் உங்கள் சக போர்வீரன்.